ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! ரவி சாஸ்திரியின் அதிரடி தேர்வு

Published : May 28, 2023, 06:22 PM IST
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! ரவி சாஸ்திரியின் அதிரடி தேர்வு

சுருக்கம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டிய இந்திய அணியின் ஆடும் லெவனை ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார்.  

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 ஃபைனலுக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய உலகின் வலுவான 2 அணிகள் ஃபைனலில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் ஜெயித்து கோப்பையை வெல்ல இந்திய அணி களமிறக்க வேண்டிய ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ரவி சாஸ்திரி.

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். அதன்பின்னர் புஜாரா, கோலி, ரஹானே என்பது வழக்கமான பேட்டிங் ஆர்டர். விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தை தேர்வு செய்துள்ளார். 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 ஃபாஸ்ட் பவுலர்கள் என்ற காம்பினேஷனில் பவுலர்களை தேர்வு செய்துள்ளார்.

அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஸ்பின்னர்கள். ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகிய மூவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளார். 

ரவி சாஸ்திரி தேர்வு செய்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..