IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

By Rsiva kumarFirst Published Jan 8, 2023, 9:59 AM IST
Highlights

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்னிலும், 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்னிலும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தன. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.

சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

கடின இலக்கை துரத்திய இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 91 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இது ஒரு புறம் இருக்க இந்தப் போட்டியில் இந்திய அணி நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க...

அற்புதம் 1:

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்தது.

அற்புதம் 2:

2ஆவது டி20 போட்டியில் அறிமுகமான ராகுல் திரிபாதி 5 ரன்களில் வெளியேற, 3ஆவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அர்ஷ்தீப் சிங் அருமையான பவுலிங்..! இலங்கையை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டி டி20 தொடரை வென்றது இந்தியா

அற்புதம் 3:

முதல் போட்டியில் 7 ரன்னிலும், 2ஆவது போட்டியிலும் 5 ரன்னிலும் ஆட்டமிழந்த சுப்மன் கில் இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

அற்புதம் 4:

அடுத்து வந்த இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைப்படும் ஸ்கை - சூர்யகுமார் யாதவ் இலங்கை பௌலர்களை துவம்சம் செய்தார். மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை பறக்க விட்டார். டி20 போட்டிகளில் அதிகவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார். 45 பந்துகளில் தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். முதலிடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். 35 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

இலங்கை பவுலிங்கை அடித்து வெளுத்து டி20யில் 3வது சதமடித்தார் சூர்யகுமார் யாதவ்..! இலங்கைக்கு மிகக்கடின இலக்கு

அற்புதம் 5:

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.

அற்புதம் 6:

கடந்த 2 போட்டிகளிலும் 2 ஓவர்கள் மட்டும் வரையில் வீசிய ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வரை வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 விக்கெட்டுகளும் முக்கியமான விக்கெட்டுகள். ஒன்று அவிஷ்கா பெர்னாண்டோ (1), மற்றொன்று சமிகா கருணாரத்னே (0).

அற்புதம் 7:

கடந்த டி20 போட்டியில் அதிக நோபால் கொடுத்த வள்ளல் அர்ஷ்தீப் சிங், இந்தப் போட்டியில் பொறுமையாகவும், நிதானமாகவும் பந்து வீசினார். ஆனால், இந்த முறை நோபால் வீசவில்லை. மாறாக 4 வைடுகள் கொடுத்தார். அதுமட்டுமின்றி 2.4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் சிங் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

அற்புதம் 8:

உம்ரான் மாலிக் தன் பங்கிற்கு 3 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் ஒரு நோபால், 3 வைடுகள் அடங்கும்.

அற்புதம் 9:

கடந்த போட்டியில் 50 ரன்களுக்கு மேல் கொடுத்த ஷிவம் மவி இந்தப் போட்டியில் ஒரேயொரு ஓவர் மட்டுமே வீசினார்.

அற்புதம் 10:

சொந்த மண்ணில் இதுவரை இந்திய அணி டி20 தொடரை இழக்கவேயில்லை. இலங்கைக்கு எதிராக 29 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி இதே போன்று பேட்டிங் தேர்வு செய்திருந்தால் இலங்கை அணி அடித்த 200 ரன்களை இந்திய அணி அடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

click me!