ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டியை பார்ப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் எப்படி பந்து வீசுகிறார் என்பது தான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் திரும்ப வந்துள்ளார். அதோடு, அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீரும் இணைந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் கொல்கத்தா அணி விளையாடும் போட்டியை பார்ப்பதற்கான முக்கியமான 5 காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க….
ஷ்ரேயாஸ் ஐயர்:
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது கேப்டனாக அணிக்கு திரும்பியிருக்கிறார். இந்த தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.
ரிங்கு சிங்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரது பார்வையும் தன் மீது திருப்பிய ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் டி20 தொடரில் அசைக்க முடியாத இடம் கிடைத்தது. கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 474 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 அரைசதங்கள் அடங்கும். 31 பவுண்டரியும், 29 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 67* ரன்கள் எடுத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்தது தான் ரிங்கு சிங்கை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ரிங்கு முதலிடத்தில் இருக்கிறார். இதுவரையில் 31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 725 ரன்கள் எடுத்துள்ளார்.
எந்த ஜோடி ஓபனிங்?
கடந்த 2 சீசன்களாக கேகேஆர் அணியில் 12 தொடக்க வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சீசனில் எப்படி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்க வீரராக கடந்த சீசனில் விளையாடியிருக்கிறார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பிருக்கிறது.
கவுதம் காம்பீர்:
கொல்கத்தா அணிக்கு 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 2 முறை டிராபியை வென்று கொடுத்த கவுதம் காம்பீர் மீண்டும் தனது ஹோம் அணிக்கு திரும்பியுள்ளார். இதற்கு முன்னதாக லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் காம்பீர் கடந்த 2 சீசன்களாக அணியை டாப் 4 இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். இந்த அணி தொடர்ந்து 2 சீசன்களாக புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்திருந்தது.
மிட்செல் ஸ்டார்க்:
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார் மீது நம்பிக்கை வைத்து அவரை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவரையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடினார். 13 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் கொடுத்து 20 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
கேகேஆர் அணியில் இடம் பெற்ற வீரர்களின் பட்டியல்:
நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு, பில் சால்ட், கேஎஸ் பரத், மணீஷ் பாண்டே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், சுயாஷ் சர்மா, முஜீப் உர் ரஹ்மான், துஷ்மந்தா சமீரா, சகீப் ஹூசைன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, மிட்செல் ஸ்டார்க், சேடன் சக்காரியா.
கேகேஆர் விளையாடும் போட்டிகள்:
மார்ச் 23: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கொல்கத்தா – இரவு 7.30 மணி
மார்ச் 29 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூரு – இரவு 7.30 மணி
ஏப்ரல் 03: டெல்லி கேப்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – விசாகப்பட்டினம் – இரவு 7.30 மணி