ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற இருந்த ஆர்சிபி அணியின் பெயரானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பர வீடியோவில் ராஷ்மிகா மந்தனா, கிச்சா சுதீப், ரிஷப் ஷெட்டி, சிவராஜ் குமார், புனீத்ராஜ்குமார் மனைவி அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர்.
முதல் முறையாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது முதல் ராயல் சேலஞ்சஸ்ர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து 17ஆவது சீசனும் வரும் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்க இருக்கிறது.
ಇವಾಗ ಎಲ್ಲರಿಗೂ ಅರ್ಥ ಆಯ್ತು ! We thank you wholeheartedly for taking part in this special video. ❤
ನಿಮ್ಮ PRK ಬ್ಯಾನರಿನ ಚಿತ್ರಗಳು ಮತ್ತಷ್ಟು ಯಶಸ್ಸು ಕಾಣಲಿ ಹಾಗೂ ಹೊಸ ಪ್ರತಿಭೆಗಳಿಗೆ ಇನ್ನಷ್ಟು ಅವಕಾಶ ಸಿಗಲಿ ಅಂತ ಹಾರೈಸ್ತಿವಿ. 💯 pic.twitter.com/eqCECBgCOj
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரின் பெயரானது பெங்களூரு என்று மாற்றம் செய்யப்பட்டது. அப்போது முதல் பெங்களூர் அணியின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. பெயர் மாற்றம் செய்யாத நிலையில் தான் 16 சீசன்களாக ஆர்சிபி டிராபியை கைப்பற்றவில்லை என்று கூறப்பட்டது. எனினும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் ஆர்சிபி மகளிர் அணி டிராபியை கைப்பற்றி சரித்திரம் படைத்தது.
ಇವಾಗ ಎಲ್ಲರಿಗೂ ಅರ್ಥ ಆಯ್ತು ! We thank you wholeheartedly for taking part in this special video. ❤
ನಿಮ್ಮ ಚಿತ್ರಗಳು ಎಲ್ಲಾ ರೆಕಾರ್ಡ್ ಬ್ರೇಕ್ ಮಾಡ್ಲಿ ಅಂತ ಹಾರೈಸ್ತಿವಿ. 💯 pic.twitter.com/llJFumLACA
இந்த நிலையில் தான் பெங்களூருவில் நேற்று நடந்த ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் என்றிருந்த அணியின் பெயரானது தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் பிரீமியர் லீக் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆர்சிபி ஆண்கள் அணி கேப்டன் பாப் டூப்ளெசிஸ், விராட் கோலி ஆகியோர் கலந்து கொண்டனர். அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது மட்டுமின்றி லோகோவும் மாற்றப்பட்டுள்ளது. அதோடு அணியின் ஜெர்சியும் மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து வந்த நிலையில் இனி, நீலம், சிவப்பு கலந்த புதிய ஜெர்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் விளையாட இருக்கின்றனர். புதிய ஜெர்சியின் லக், சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் எப்படி கை கொடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், எந்த காலத்திலும் ஆர்சிபி அணியை விட்டு விலகமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ಇವಾಗ ಎಲ್ಲರಿಗೂ ಅರ್ಥ ಆಯ್ತು ! We thank you wholeheartedly for taking part in this special video. ❤
ನಿಮ್ಮ ಚಿತ್ರಗಳು ಎಲ್ಲಾ ರೆಕಾರ್ಡ್ ಬ್ರೇಕ್ ಮಾಡ್ಲಿ ಅಂತ ಹಾರೈಸ್ತಿವಿ. 💯 pic.twitter.com/PGI7EqjPdS
அதோடு தன்னை யாரும் கிங் என்று அழைக்க வேண்டாம் என்றும், விராட் என்று அழைத்தால் போதும் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில், தான் ஆர்சிபி அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட விளம்பர வீடியோவில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, ராஷ்மிகா மந்தனா, கிச்சா சுதீப், சிவராஜ் குமார், காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களை ஆர்சிபி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதோடு, ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ಇವಾಗ ಎಲ್ಲರಿಗೂ ಅರ್ಥ ಆಯ್ತು ! We thank you wholeheartedly for taking part in this special video. ❤
ನಿಮ್ಮ ಚಿತ್ರಗಳು ಎಲ್ಲಾ ರೆಕಾರ್ಡ್ ಬ್ರೇಕ್ ಮಾಡ್ಲಿ ಅಂತ ಹಾರೈಸ್ತಿವಿ. 💯 pic.twitter.com/TSGJ93cGGR