இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இது இரு அணிகளுக்கும் இடையிலான, 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் தொடராகும். டொமினிகாவில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
TNPL 2023 Final: டிஎன்பிஎல் ஃபைனல்: லைகா கோவை கிங்ஸ் பேட்டிங்; என்ன செய்யப் போகிறது நெல்லை?
இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும், இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். இதே போன்று, இஷான் கிஷானும் இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான் கேப்பை வழங்கினார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, ரோகித் சர்மா கேப் வழங்கினார்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்
வெஸ்ட் இண்டீஸ்:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ரேமன் ரைஃபர்
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே போன்று முகேஷ் குமாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, ஜெயதேவ் உனத்கட் மற்றும் முகமது சிராஜ் ஆகிய பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இன்றைய போட்டியில் விளையாடுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பிளேயர்ஸ் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறாங்க?
இது வரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 98 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 22 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 46 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா ஹோம் மைதானத்தில் 13 டெஸ்ட் போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஹோம் மைதானத்தில் 16 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன. இதே போன்று இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 9 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
வெஸ்ட் இண்டீஸில் நடந்த 51 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 9 போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 26 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்தியாவின் சாதனைகள்:
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகள்:
2019 – வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா, சபீனா பார்க், கிங்ஸ்டன், ஜமைக்கா – 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
2019 - வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா – 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
2018 – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ், ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஹைதராபாத், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
2018 – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் சீரிஸ்:
2019 - வெஸ்ட் இண்டீஸில் இந்தியா – 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியது.
2018 – இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் - 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியது.
2016 - வெஸ்ட் இண்டீஸில் இந்தியா - 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியது.
2013 - இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் - 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியது.
2011 - இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் - 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியது.