வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published Dec 18, 2019, 1:21 PM IST
Highlights

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது. 
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 

முதல் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்த வெஸ்ட் இண்டீஸ், இந்த போட்டியிலும் டாஸ் வென்று, இந்திய அணியையே முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் ஐந்தாவது பவுலராக ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆடினார். அவர் பேட்டிங் ஆடுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் பவுலிங்கில் 10 ஓவரும் வீசிய அவர், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய அணியில் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருப்பதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் தேவையில்லை. ஆனால் 5 பவுலர்கள் அவசியம் தேவை என்பதால் ஷிவம் துபே நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஷமி. 
 

click me!