3 இலக்கத்தை கூட எட்டாத பரிதாபம்.. மொக்கை ஸ்கோருக்கு சுருண்ட தமிழ்நாடு

By karthikeyan VFirst Published Dec 18, 2019, 12:30 PM IST
Highlights

ரஞ்சி தொடரில் இமாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் மிகவும் சொற்பமான ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தமிழ்நாடு அணி அதிர்ச்சியளித்துள்ளது. 
 

முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டு ஆடியது. வெற்றி பெற வாய்ப்பிருந்த அந்த போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், தமிழ்நாடு அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் இமாச்சல பிரதேசத்திற்கு எதிராக ஆடிவருகிறது தமிழ்நாடு அணி. இந்த போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் கேப்டன்சி செய்த விஜய் சங்கர் இந்த போட்டியில் ஆடவில்லை. முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகிய சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் ஆடவில்லை. 

நேர்ரு தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இமாச்சல பிரதேச அணி, சீனியர் ஸ்பின்னர் அஷ்வினின் சுழலில் 158 ரன்களுக்கு சுருண்டது. அனுபவத்தை பயன்படுத்தி அபாரமாக வீசிய அஷ்வின், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணி, இமாச்சல பிரதேச அணியின் பேட்டிங் பரவாயில்லை எனுமளவிற்கு படுமோசமாக பேட்டிங் ஆடியது. 

அனுபவ வீரர்கள் அதிகமில்லாமல், இளம் வீரர்களை கொண்ட தமிழ்நாடு அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. அபினவ் முகுந்த், பாபா அபரஜித், கே முகுந்த், ஜெகதீஷன், ஷாருக்கான் என யாருமே சரியாக ஆடவில்லை. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 24 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு அணி வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. 

இதையடுத்து 62 ரன்கள் முன்னிலையுடன் இமாச்சல பிரதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது. 
 

click me!