#WIvsSL கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது

Published : Mar 15, 2021, 02:22 PM IST
#WIvsSL கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.  

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இலங்கையை ஒயிட்வாஷ் செய்து வென்றது.

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 50 ஓவரில் 274 ரன்கள் அடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா ரன்கள் மற்றும் கருணரத்னே 31 ரன்கள் அடித்தனர். நிசாங்கா(24), சண்டிமால்(16), ஷனாகா(22) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹசரங்கா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 60 பந்தில் 80 ரன்களை குவித்து இலங்கை அணி 274 ரன்களை குவிக்க உதவினார். பண்டாரா 55 ரன்கள் அடித்தார்.

275 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் இம்முறை பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், 64 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹோப். டேரன் பிராவோ சிறப்பாக ஆடி சதமடித்து, வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு உதவினார். 102 ரன்னில் டேரன் பிராவோ ஆட்டமிழக்க, கேப்டன் பொல்லார்டு அரைசதம்(53) அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. ஆட்டநாயகனாக டேரன் பிராவோவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!
IND vs NZ: ஆல்ரவுண்டருக்கு மீண்டும் சான்ஸ்.. ருத்ராஜை விட இவர் திறமைசாலியா? விளாசும் நெட்டிசன்கள்!