#INDvsENG இங்கி., வீரர்கள் யாரையுமே பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் தடுத்த இந்திய அணி..! அடிக்கக்கூடிய இலக்கு

By karthikeyan VFirst Published Mar 14, 2021, 9:07 PM IST
Highlights

இங்கிலாந்து வீரர்கள் யாரையுமே பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் தடுத்ததால், இந்திய அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று நடந்துவரும் 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணி 2 மாற்றங்களுடன் இந்த போட்டியில் களமிறங்கியது. தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக அறிமுக வீரர் இஷான் கிஷனும், அக்ஸர் படேலுக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை 3வது பந்திலேயே புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடிய 35 பந்தில் 46 ரன்கள் அடித்தார். ஆனால் கடந்த போட்டியை போலவே அவரை இந்த போட்டியிலும் அரைசதம் அடிக்கவிடாமல் இந்திய அணி வீழ்த்தியது. ஜேசன் ராயை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

மாலன் 23 பந்தில் 24 ரன்னுக்கு அவுட்டானார். 15 பந்தில் 20 ரன் அடித்த பேர்ஸ்டோவை சுந்தர் வீழ்த்த, கேப்டன் மோர்கனை 28 ரன்னில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். 21 பந்தில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே திணறிய பென் ஸ்டோக்ஸை கடைசி ஓவரில் ஷர்துல் தாகூர் 24 ரன்களுக்கு வீழ்த்த, 20 ஓவரில் 164 ரன்கள் மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து வீரர்கள் யாரையுமே இந்திய பவுலர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட அனுமதிக்காததால் 164 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி. 165 ரன்கள் என்பது இந்திய அணிக்கு எளிதான இலக்கே.
 

click me!