#INDvsENG தோற்றுப்போன இந்திய அணிக்கே அதுக்கான அவசியம் இல்லங்கிறப்ப எங்களுக்கென்ன..? கெத்தா களமிறங்கும் இங்கி.,

Published : Mar 14, 2021, 03:19 PM IST
#INDvsENG தோற்றுப்போன இந்திய அணிக்கே அதுக்கான அவசியம் இல்லங்கிறப்ப எங்களுக்கென்ன..? கெத்தா களமிறங்கும் இங்கி.,

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மாவை ஆடவைக்காததற்காக இந்திய அணி மீது விமர்சனம் எழுந்தது. ஆனாலும் இன்று நடக்கும் 2வது டி20 போட்டியிலும் ரோஹித் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியின்போதே, 2 டி20 போட்டிகளில் ஓய்வு என்று கூறப்பட்டுவிட்டதால் ரோஹித்துக்கும் ஆட வாய்ப்பு கிடைக்காது. எனவே இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்பதால், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

தோற்றுப்போன இந்திய அணியே மாற்றம் செய்வதற்கான தேவை இருந்தும் செய்யாமல் இருக்கும்போது, பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் அசத்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான அவசியமே இல்லை.

எனவே இங்கிலாந்து அணி முதல் டி20 போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs ZIM: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! ஸ்டார் ஓப்பனருக்கு ஷாக், இளம் புயலுக்கு சான்ஸ்!
Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!