டி20 உலக கோப்பை: 2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது! அயர்லாந்திடம் படுதோல்வி

By karthikeyan VFirst Published Oct 21, 2022, 1:52 PM IST
Highlights

2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்குக்கூட முன்னேறாமல் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது.
 

டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. தகுதிச்சுற்றின் க்ரூப் ஏ-வில் இலங்கை மற்று நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின.

க்ரூப் பி-யில் இருந்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறப்போவது எந்த அணிகள் என்பதை தீர்மானிக்கும் இன்றைய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் அயர்லாந்தும் மோதின.

இதையும் படிங்க - கம்பீர் - யுவராஜ் சிங்கை சுட்டிக்காட்டி இளம் வீரருக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கேட்கும் ரெய்னா

ஹோபர்ட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் வழக்கம்போல பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 4ம் வரிசையில் ஆடிய பிரண்டன் கிங் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். அவரும் பெரிதாக அடிக்கவில்லை. 48 பந்தில் 62 ரன்கள் அடித்தார். ஆனால் அவர் அரைசதம் அடித்ததால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 146 ரன்களையாவது எட்டியது.

கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன், எவின் லூயிஸ், ரோவ்மன் பவல் ஆகிய அனைவருமே ஏமாற்றமளித்தனர். அதனால் 147 ரன்கள் என்ற எளிய இலக்கையே அயர்லாந்துக்கு வெஸ்ட் இண்டீஸால் நிர்ணயிக்க முடிந்தது.

147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான பால்பிர்னி 37 ரன்கள் அடித்தார். டக்கர் 48 ரன்களும், ஸ்டர்லிங் 66 ரன்களும் அடிக்க, 18வது ஓவரிலேயே இலக்கை அடித்து அயர்லாந்து வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் க்ரூப் பியிலிருந்து அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. க்ரூப் பி-யிலிருந்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் 2வது அணியை தீர்மானிக்கும் அடுத்த போட்டி ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற 30% தான் சான்ஸ் இருக்கு..! கபில் தேவ் அதிரடி

 2 மு றை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷிம்ரான் ஹெட்மயர் ஆகிய டி20 ஜாம்பவான்கள் இல்லாமல் டி20 உலக கோப்பைக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மரண அடி வாங்கியுள்ளது. 

click me!