WI vs ZIM: 2வது டெஸ்ட்டில் ஜிம்பாப்வே இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

Published : Feb 14, 2023, 11:44 PM IST
WI vs ZIM: 2வது டெஸ்ட்டில் ஜிம்பாப்வே இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

சுருக்கம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.  

வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் தொடக்க வீரர் இன்னசண்ட் கயா அதிகபட்சமாக 38 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அதைக்கூட அடிக்காமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 115 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது.

IND vs AUS: நீங்க 2வது டெஸ்ட்டில் ஆடலாம்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த பிசிசிஐ..!

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரைஃபர் மற்றும் ரோஸ்டான் சேஸ் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். ரைஃபர் 53 ரன்களும், ரோஸ்டான் சேஸ் 70 ரன்களும் அடித்தனர். ஜோஷுவா ட சில்வா 44 ரன்கள் அடித்தார். சந்தர்பால் 36 ரன்களும், மேயர்ஸ் 30 ரன்களும் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் அடித்தது. 

பாபர் அசாமை தூக்கிட்டு பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ஹசன் அலி அதிரடி

177 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி வெறும் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?