
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸும் லாகூர் காலண்டர்ஸும் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முல்தான் சுல்தான்ஸை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லாகூர் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இன்று கராச்சியில் நடக்கும் 2வது போட்டியில் கராச்சி கிங்ஸும் பெஷாவர் ஸால்மியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
PSL 2023: பரபரப்பான முதல் போட்டியில் முல்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி லாகூர் அணி த்ரில் வெற்றி
கராச்சி கிங்ஸ் அணி:
ஷர்ஜீல் கான், ஹைதர் அலி, ஷோயப் மாலிக், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), காசிம் அக்ரம், பென் கட்டிங், இமாத் வாசிம் (கேப்டன்), ஆண்ட்ரூ டை, முகமது ஆமீர், இம்ரான் தாஹிர், மிர் ஹம்ஸா.
பாபர் அசாமை தூக்கிட்டு பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ஹசன் அலி அதிரடி
பெஷாவர் ஸால்மி அணி:
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), சயீம் ஆயுப், பானுகா ராஜபக்சா, டாம் கோலர் காட்மோர், ஷகிப் அல் ஹசன், ஜிம்மி நீஷம், வஹாப் ரியாஸ், சல்மான் இர்ஷாத், சுஃபியான் முகீம், குர்ராம் ஷேஷாத்.