WI vs NZ: பிரண்டன் கிங், ப்ரூக்ஸ் அதிரடி அரைசதம்.. கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

By karthikeyan VFirst Published Aug 15, 2022, 3:08 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.
 

நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி டி20 தொடரை வென்றுவிட்டது.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.

இதையும் படிங்க - அவரை அசால்ட்டா நெனச்சுராதீங்க! இந்திய வீரரை காட்டி பாகிஸ்தான் அணியை பகிரங்கமாக எச்சரிக்கும் முன்னாள் வீரர்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், ரோவ்மன் பவல் (கேப்டன்), டெவான் தாமஸ் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரொமாரியோ ஷெஃபெர்டு, டோமினிக் டிரேக்ஸ், அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், ஹைடன் வால்ஷ், அல்ஸாரி ஜோசஃப்.

கடைசி டி20 போட்டி ஜமைக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 145 ரன்கள் மட்டுமே அடித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக க்ளென் ஃபிலிப்ஸ் 26 பந்தில் 41 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களே அடித்தனர்.

இதையும் படிங்க - அடுத்தடுத்த சதங்கள்.. அலறவிடும் புஜாரா..! 5 சிக்ஸர்களுடன் காட்டடி சதம்.. வீடியோ

இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங் மற்றும் ஷமர் ப்ரூக்ஸ் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 102 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். பிரண்டன் கிங் 53 ரன்கள் அடித்தார். ப்ரூக்ஸ் 56 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

ஏற்கனவே டி20 தொடரை இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பிரண்டன் கிங்கும், தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் க்ளென் ஃபிலிப்ஸும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

click me!