#WIvsRSA தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 2, 2021, 8:39 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தென்னாப்பிரிக்கா வென்றது.

இதையடுத்து நடந்துவரும் டி20 தொடரின் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் தொடர் 2-2 என சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது. அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லெவிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஃபேபியன் ஆலன், பிராவோ, மெக்காய், ஃபைடல் எட்வர்ட்ஸ்.

உத்தேச தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், டெம்பா பவுமா(கேப்டன்), மார்க்ரம், வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபாடா,  அன்ரிக் நோர்க்யா, ஷாம்ஸி, லுங்கி இங்கிடி.
 

click me!