#WIvsPAK தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Aug 2, 2021, 9:48 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டி20 போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2வது போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது.

4வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது. பாகிஸ்தான் அணி 1-0 என இந்த தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், நாளை நடக்கும் கடைசி போட்டியில் வென்று 2-0 என தொடரை வெல்லும் பாகிஸ்தான் அணி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியோ சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துவிடக்கூடாது என்ற முனைப்பில், இந்த போட்டியில் வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.

இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கும்  நிலையில், இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஆண்ட்ரே ஃப்ளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், பொல்லார்டு(கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, ரொமாரியோ ஷெஃபெர்ட், ஹைடன் வால்ஷ், அகேல் ஹுசைன்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

ஷர்ஜீல் கான், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), முகமது ஹஃபீஸ், ஃபகர் ஜமான், சொஹைப் மக்சூத், ஷதாப் கான், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரௌஃப், உஸ்மான் காதிர்.
 

click me!