#ENGvsIND முதல் டெஸ்ட்: அகர்வால் அவுட்; கடைசி நேரத்தில் அதிரடி மாற்றங்கள்..! இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Aug 02, 2021, 07:59 PM ISTUpdated : Aug 02, 2021, 08:00 PM IST
#ENGvsIND முதல் டெஸ்ட்: அகர்வால் அவுட்; கடைசி நேரத்தில் அதிரடி மாற்றங்கள்..! இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவனை ஏற்கனவே இந்திய அணி உறுதி செய்து, அதற்கேற்ப திட்டங்களை வகுத்து வைத்திருக்கும். இந்நிலையில், இன்று பயிற்சியின் போது தொடக்க வீரர் மயன்க் அகர்வால் பின் மண்டையில் அடிபட்டு கன்கஷனில் உள்ளார்.

ரோஹித்துடன் மயன்க் அகர்வாலை ஓபனிங்கில் இறக்கிவிட்டு, மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கிவிடும் திட்டத்தில் இந்திய அணி இருந்தது. ஆனால் கன்கஷனில் உள்ள மயன்க் அகர்வால் முதல் போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 

எனவே ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்குவார். அதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி ஆடும் லெவனில் வாய்ப்பு பெறுவார். ஸ்பின்னராக அஷ்வின் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!