எதிர்காலத்தில் ஷிகர் தவானுக்கு சரியான மாற்று வீரர் இவர் தான்.! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 2, 2021, 9:24 PM IST
Highlights

ஷிகர் தவானுக்கு யார் சரியான மாற்று வீரராக இருப்பார் என்று வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.
 

2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான, 2012-13ம் ஆண்டிலிருந்துதான் அணியின் நிரந்தர வீரராக மாறினார். 2013லிருந்து ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக இந்திய அணிக்காக அபாரமாக ஆடியுள்ளார்.

2013ல் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றபோது, அந்த தொடரில் அபாரமான பங்களிப்பு செய்தவர் ஷிகர் தவான். அதேபோல 2017 சாம்பியன்ஸ் டிராபியிலும் அபாரமாக ஆடினார். இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 144 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ள தவான், டெஸ்ட், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் தான் தொடர்ச்சியாக ஆடிவருகிறார்.

அதிலும், அடுத்தடுத்து ஷுப்மன் கில், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் என இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்பதால், அதிலும் இடத்தை விரைவில் இழக்கும் அபாயம் உள்ளது. டி20 போட்டிகளில் ரோஹித்துடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக ஆடிவருகிறார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் ஷிகர் தவானின் இடத்தை நிரப்ப எந்த வீரர் சரியாக இருப்பார் என்று வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், தேவ்தத் படிக்கல் தான் எதிர்காலத்தில் ஷிகர் தவானுக்கு சரியான மாற்று வீரராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தவான் இடது கை பேட்ஸ்மேன். இந்திய அணி ஓபனிங்கை பொறுத்தமட்டில் எப்போதுமே, இடது - வலது காம்பினேஷனிற்கு முக்கியத்துவம் கொடுக்கும். அந்தவகையில், ரோஹித் சர்மாவிற்கு மாற்றாக ஷுப்மன் கில், பிரித்வி ஷா ஆகிய வீரர்கள் உள்ளனர். இடது கை ஷிகர் தவானுக்கு சரியான மாற்றாக இளம் இடது கை அதிரடி வீரரான தேவ்தத் படிக்கல் தான் உள்ளார். அந்தவகையில், அவர் தான் தவானுக்கு சரியான மாற்று என்று சேவாக் கூறியுள்ளார்.

தேவ்தத் படிக்கல் ஐபிஎல் 13 மற்றும் 14வது சீசன்களில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமும் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!