#ICCWTC ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் தேர்வு

By karthikeyan VFirst Published Jun 16, 2021, 7:16 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியை முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை மறுநாள்(18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த 2 மிகச்சிரந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்நிலையில், ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.

ரோஹித், கில், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய 6 வீரர்களும் ஆடுவது உறுதி. 5 பவுலர்கள் கொண்ட பவுலிங் யூனிட்டில் 2 ஸ்பின்னர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையுமே தேர்வு செய்துள்ள ஜாஃபர், 3 ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் அபாரமாக பந்துவீசிவரும் முகமது சிராஜை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் வாசிம் ஜாஃபர், இஷாந்த் சர்மாவைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா.
 

click me!