#ICCWTC ஃபைனல்: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்..! விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வு

By karthikeyan VFirst Published Jun 16, 2021, 6:11 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை மறுநாள்(18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த 2 மிகச்சிரந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன், கில் - மயன்க் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்ற கேள்விக்கு ஷுப்மன் கில் தான் என்ற விடை கிடைத்துவிட்டது. அதேபோல பவுலிங் யூனிட் குறித்த சந்தேகமும் நிலவுகிறது. இந்திய அணி 3 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்வின் - ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுமே நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர்கள் என்பதால் அவர்கள் இருவருமே ஆடுவார்கள்.

3 ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் ஆடுவது உறுதி. 3வது ஃபாஸ்ட் பவுலராக இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் முகமது சிராஜை அணியில் எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் உள்ளன. எனவே அதுகுறித்த இந்திய அணியின் முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், நான் 5 பேட்ஸ்மேன்களுடன் ஆடுவேன். 6வது வீரர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஜடேஜாவின் பேட்டிங்கின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரை 7ம் வரிசை பேட்ஸ்மேனாக இறக்குவேன். 8ம் வரிசையில் அஷ்வின். ஜடேஜா இப்போது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்கிறார். ஜடேஜா திறமையான பேட்ஸ்மேன். எனவே அவரை 7ம் வரிசையில் அவர் தான் ஆடவேண்டும் என்று லக்‌ஷ்மண் தெரிவித்தார்.
 

click me!