ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வின்னர், ரன்னர் அப் அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? முழு விவரம்

Published : Jun 14, 2021, 10:02 PM IST
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வின்னர், ரன்னர் அப் அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? முழு விவரம்

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அணிகள் பிடித்த இடத்திற்கு ஏற்ப அந்தந்த அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு என்று பார்ப்போம்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் முறையாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் ஆடியதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் ஃபைனலில் மோதும்.

அந்தவகையில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஃபைனலில் மோதுகின்றன. வரும் 18-22ல் ஃபைனல் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.11.71 கோடி வழங்கப்படும். ஃபைனலில் தோற்கும் ரன்னர் அணிக்கு ரூ.5.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். போட்டி டிராவில் முடிந்தால், இரு அணிகளுக்கும் தலா ரூ.8.78 கோடி வழங்கப்படும்.

3ம் இடத்தை பிடித்த ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.3.3 கோடியும், 4ம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.2.5 கோடியும், 5ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.1.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!