#ICCWTC ஃபைனல்: நியூசிலாந்து தான் கண்டிப்பா ஜெயிக்கும்..! அடித்துக்கூறும் ஷேன் பாண்ட்

By karthikeyan VFirst Published Jun 16, 2021, 4:21 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று நியூசிலாந்து முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் ஷேன் பாண்ட் உறுதியாக கூறியுள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. சமபலம் வாய்ந்த இந்தியாவும் நியூசிலாந்தும் இந்த ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடியது நியூசிலாந்துக்கு மேட்ச் பிராக்டிஸாக அமைந்தது. அதுமட்டுமல்லாது அந்த தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து பெற்ற வெற்றி, அந்த அணிக்கு பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.

எனவே நியூசிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதே கருத்தைத்தான் நியூசிலாந்து முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷேன் பாண்டும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஷேன் பாண்ட், நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன். மேட்ச் பிராக்டீஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய அணி நல்ல பேலன்ஸான பவுலிங் அட்டாக்கை பெற்றிருக்கிறது. இந்திய அணி 3 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் ஆடுவார்கள் என நினைக்கிறேன்.

நியூசிலாந்து அணி 5 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடும். டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தான் செய்யும். நியூசிலாந்து அணி டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தால், இந்திய அணியை சொற்ப ரன்களுக்கு மிக எளிதாக சுருட்டிவிடும். எனவே டாஸ் தான் ஃபைனலில் முக்கிய பங்காற்ற போகிறது என்று ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.
 

click me!