டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும்..? முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம் ஆருடம்

By karthikeyan V  |  First Published Oct 13, 2022, 10:14 PM IST

டி20 உலக கோப்பையில் எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆருடம் தெரிவித்துள்ளார். 
 


டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் ஆடி தீவிரமாக தயாராகிவருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பயிற்சி போட்டியில் இலக்கை விரட்ட முடியாமல் படுதோல்வி அடைந்த இந்தியா

இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளும் வலுவாக திகழ்கின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் (பாபர் அசாம் - முகமது ரிஸ்வான்), ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகியவை வலுவாக உள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங் தான் பலவீனமாக உள்ளது. ஆனால் டாப் ஆர்டர் டபுள் வலுவாக இருப்பதால், கொஞ்சம் மேனேஜ் செய்து ஆடினால் பாகிஸ்தான் அணி மிகவலுவாக இருக்கும்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் மிரட்டலான அணியாக திகழ்கிறது. பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், மொயின் அலி ஆகியோர் செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகின்றனர். பவுலிங்கிலும் ரீஸ் டாப்ளி, மார்க் உட், டேவிட் வில்லி, சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத், கிறிஸ் ஜோர்டான் என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு முன் நடந்துவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்று மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர்.

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக், டேவிட் மில்லர் ஆகிய அதிரடி வீரர்கள் மிரட்டலான ஃபார்மில் உள்ளனர். ரபாடா, நோர்க்யா ஆகியோருடன் மார்கோ யான்செனும் பவுலிங்கிற்கு வலுசேர்ப்பார். ஸ்பின் பவுலிங்கில் ஷம்ஸி மற்றும் கேஷவ் மஹராஜ் வலுசேர்க்கின்றனர். எனவே டி20 உலக கோப்பையை வெல்வதற்கான போட்டி அணிகளுக்கு இடையே கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு மாற்றாக சர்ப்ரைஸ் சாய்ஸ்..! ஆஸ்திரேலியாவிற்கு பறந்த 3 வீரர்கள்

இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் எந்தெந்த அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரமும் தனது ஆருடத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
 

click me!