டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேம் சேஞ்சர் இவர் தான்..! வாசிம் அக்ரம் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 22, 2021, 10:16 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேம் சேஞ்சர் சூர்யகுமார் யாதவ் தான் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் தகுதி போட்டிகள் முடிகின்றன. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. வரும் 24ம் தேதி(நாளை மறுநாள்) இந்திய அணி அதன் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த உலக கோப்பையை இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளில் ஒன்று வெல்லும் என்று அதிகமானோர் மதிப்பிட்டுள்ளனர். விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை தூக்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அதிரடியான பேட்டிங், உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலிங், மாயாஜால ஸ்பின்னர் உட்பட தரமான ஸ்பின் பவுலிங் என நல்ல வலுவான மற்றும் பேலன்ஸான அணியாக திகழ்கிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஐபிஎல்லில் இருந்தே செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 14வது சீசனில் 626 ரன்களை குவித்த கேஎல் ராகுல், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகளிலும் அபாரமாக ஆடினார். ஐபிஎல்லில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஃபார்முக்கு வந்தனர்.

கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. பும்ரா, ஷமி என 2 மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களும், அஷ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் ஸ்பின்னர்களுடன் மாயாஜால ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியும் உள்ளார். எனவே அனைத்துவகையிலும் சிறந்த வீரர்களையும், நிறைய மேட்ச் வின்னர்களையும் கொண்ட அணியாக இந்திய அணி திகழ்கிறது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேம் சேஞ்சர் குறித்து பேசிய வாசிம் அக்ரம், சூர்யகுமார் யாதவ் தான் இந்தியாவின் கேம் சேஞ்சர். பவர்ப்ளேவிற்கு பின்னரும் பட்டையை கிளப்புபவர். சூர்யகுமார் யாதவின் ஷாட்டுகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். கேகேஆர் அணியின் ஆலோசகராக நான் இருந்த காலக்கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அந்த அணியில் ஆடினார். அப்போதிலிருந்து இப்போது வரை நிறைய மேம்பட்டிருக்கிறார். டெரிஃபிக்கான பிளேயராக வளர்ந்திருக்கிறார் என்று வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டினார்.
 

click me!