இந்த 2 அணிகள் டி20 உலக கோப்பை ஃபைனலில் மோதினால் நல்லா இருக்கும்; ஐசிசியே அதைத்தான் விரும்பும்! கவாஸ்கர் ஆர்வம்

By karthikeyan VFirst Published Oct 22, 2021, 9:18 PM IST
Highlights

டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் நன்றாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை.  கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

அதனால் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், டி20 உலக கோப்பையில் வரும் 24ம் தேதி நடக்கும் சூப்பர் 12 சுற்று போட்டியில்  இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்கவுள்ளது. 

இந்த உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதினால் பார்க்க நன்றாக இருக்கும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இந்த டி20 உலககோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. அத்துடன் பாகிஸ்தான் அணி மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய கவாஸ்கர், டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதை பார்க்க விரும்புகிறேன். ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதை பார்ப்பதைவிட வேறு என்ன வேண்டும்? ஐசிசியே கூட அதைத்தான் விரும்பும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!