#T20WorldCup நெதர்லாந்துக்கு எதிரான மொத்த மேட்ச்சையும் 17 ஓவரில் முடித்த இலங்கை..! இலங்கை அபார வெற்றி

Published : Oct 22, 2021, 10:12 PM IST
#T20WorldCup நெதர்லாந்துக்கு எதிரான மொத்த மேட்ச்சையும் 17 ஓவரில் முடித்த இலங்கை..! இலங்கை அபார வெற்றி

சுருக்கம்

நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி.  

டி20 உலக கோப்பை தொடரில் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறாத இலங்கை அணி தகுதி போட்டிகளில் ஆடியது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற இலங்கை அணி, கடைசி தகுதி போட்டியில் இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டது.

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணியில் ஆக்கர்மேன் மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தார். அதுவும் வெறும் 11 ரன். மற்ற அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ ஆட்டமிழக்க, 10 ஓவரில் வெறும் 44 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நெதர்லாந்து அணி.

இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் லஹிரு குமாரா ஆகிய இருவரும் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 45 ரன்கள் என்ற ஒன்றுமே இல்லாத இலக்கை விரட்டிய இலங்கை அணி வெறும் 7 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதிபெறவில்லை என்றாலும், தகுதி போட்டிகளில் அபாரமாக ஆடி 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs IRE 2nd T20: வேஸ்ட் லக்கேஜ்! இந்திய அணியில் 3 ஸ்டார் வீரர்கள் நீக்கம்! பிளேயிங் லெவன்!
India vs Ireland: அயர்லாந்துக்கு ஜாக்பாட், இந்தியாவுக்கு ஷாக்! தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்