நியூசிலாந்தில் படுமோசமா அசிங்கப்பட்ட கோலி.. முன்னாள் ஜாம்பவான் சொன்ன அதிரடி காரணம்

By karthikeyan VFirst Published Mar 1, 2020, 2:46 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி, நியூசிலாந்தில் சரியாக ஆடாமல் எல்பிடபிள்யூ ஆகிக்கொண்டே இருந்ததற்கான காரணத்தை டெஸ்ட் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும், இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணம் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக அமையவில்லை. ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.

டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு போட்டி தொடர்களிலும், பெரியளவில் சோபிக்காத கோலி, டெஸ்ட் போட்டியிலும் படுமோசமான ரன்னுக்கு அவுட்டாகி சென்றார். கோலி இதுமாதிரி அவுட்டாவதெல்லாம் அரிதினும் அரிது. முதல் இன்னிங்ஸில் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்த கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 19 ரன்களில் அவுட்டானார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். 

டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல; ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் கோலி சரியாக ஆடவில்லை. 5 டி20 போட்டிகளில் நான்கில் கோலி ஆடினார். 4வது போட்டியில் மட்டும் ஆடவில்லை. எனவே அந்த நான்கு போட்டிகளில் 45, 11, 38, 11 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 ஒருநாள் போட்டிகளில் முறையே 51, 15 மற்றும் 9 ரன்கள் அடித்தார். முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 21 ரன்கள் அடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் இரண்டாவது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 3 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே, 35 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கடைசி 22 சர்வதேச இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட கோலி அடிக்கவில்லை. கோலி நியூசிலாந்தில் பந்துடன் பேட் சரியாக கனெக்ட் ஆகாமல் எல்பிடபிள்யூ ஆனார். இந்த தொடர் விராட் கோலியின் கெரியரில் படுமோசமானதாக அமைந்தது. 

இந்நிலையில், கோலி குறித்து பேசியுள்ள விவிஎஸ் லட்சுமணன், விராட் கோலிக்கு பிரச்னை எல்பிடபிள்யூ ஆவது அல்ல. அவர் பேட்டை விடும் விதம் தான். இதேபோல தான் இங்கிலாந்திலும் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் ஆடும்போது ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தில் இப்படித்தான் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுவதும், கோலி பேட்டை ரிலீஸ் செய்யும் ஆங்கிள் தான் பிரச்னை. பந்து ஸ்விங் ஆகி உள்ளே வரும்போது அதில் எல்பிடபிள்யூ ஆகிவிடுகிறார். அவரது க்ராஸாக பேட்டை விடுவதால் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே இடைவெளி வருகிறது. அதனால் எல்பிடபிள்யூ ஆகிவிட்டார். கோலியின் ஆரம்பக்கால பழக்கம், இந்த இரண்டாவது டெஸ்ட்டில் வெளிப்பட்டது. ஆரம்பத்தில் அவர் அவுட்டான மாதிரியே 2வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்தார். 

Also Read - மறுபடியும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. மளமளவென சரிந்த விக்கெட்டுகள்

பக்காவாக திட்டம்போட்டு, அந்த திட்டத்தை களத்தில் மிகச்சரியாக செயல்படுத்தியதற்காக நியூசிலாந்தை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்தார். 
 

click me!