இந்திய வீரர்களின் வீக்னெஸே அதுதான்.. 2வது டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டை வீழ்த்திய கைல் ஜேமிசன் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 1, 2020, 11:01 AM IST
Highlights

இந்திய பேட்ஸ்மேன்களின் வீக்னெஸ் குறித்து, இரண்டாவது டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கைல் ஜேமிசன் பேசியுள்ளார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே 200 ரன்களை கூட தொடவில்லை இந்திய அணி. முதல் போட்டியில் மயன்க் அகர்வால் மட்டுமே ஓரளவிற்கு பேட்டிங் ஆடினார். அவரைத்தவிர வேறு யாருமே சோபிக்கவில்லை. கோலி, ரஹானே, புஜாரா ஆகிய சீனியர் வீரர்களே திணறினர். 

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி முனைப்பில் ஆடிவருகிறது. ஆனால் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பிரித்வி ஷா, புஜாரா, விஹாரி ஆகிய மூவருக்கும் நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. அதை பயன்படுத்தி அரைசதம் அடித்த அவர்களில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 

முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியில் அறிமுகமான கைல் ஜேமிசன், அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில், இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பிரித்வி ஷா, புஜாரா, ரிஷப் பண்ட், ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகிய 5 பேரையும் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார் ஜேமிசன். 

2 போட்டிகளிலும் இந்திய வீரர்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கின் மூலம் தெறிக்கவிட்ட ஜேமிசன், இந்திய வீரர்கள் பவுன்ஸர்களை ஆட திணறுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜேமிசன், இந்த ஆடுகளம் முதல் போட்டி ஆடிய வெலிங்டன் ஆடுகளத்தை போல அல்ல. இது சற்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. எனவே பொறுமை காக்க வேண்டியிருந்தது. இந்திய வீரர்கள் கடந்த போட்டியை விட இந்த போட்டியில் சற்று கூடுதலாக ஷாட்டுகளை ஆடினர். 

Also Read - வேற யாரையும் வச்சு கற்பனை கூட பண்ணமுடியாத கேட்ச்.. அதுதான் நம்ம ஜடேஜா.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ

ஆனால் இந்திய வீரர்கள், ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக கணிக்கமுடியாமல் திணறுகின்றனர். நாங்கள் ஒரு பவுலிங் யூனிட்டாக முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். இந்த போட்டியிலும் இதுவரை திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் பவுலிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துவீசிவருகிறோம் என்று ஜேமிசன் தெரிவித்தார்.  
 

click me!