வேற யாரையும் வச்சு கற்பனை கூட பண்ணமுடியாத கேட்ச்.. அதுதான் நம்ம ஜடேஜா.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ

By karthikeyan VFirst Published Mar 1, 2020, 10:54 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அபாரமான ஒரு கேட்ச்சை பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் அடித்தது. பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். ஆனாலும் மூவரில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அரைசதம் அடித்த இவர்கள் மூவருமே ஐம்பதுகளிலேயே ஆட்டமிழந்தனர். அதனால் இந்திய அணி 242 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லேதம் மட்டுமே அரைசதம் அடித்தார். ஆனால் அவரையும் 52 ரன்களிலேயே ஷமி வீழ்த்தினார். அவரை தவிர வேறு யாரும் அரைசதம் அடிக்கவில்லை. 

அந்த அணி 177 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஜேமிசனும் நீல் வாக்னரும் இணைந்து சிறப்பாக ஆடினர். பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்தார் ஜேமிசன். ஜேமிசனும் வாக்னரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தனர். வாக்னரை 21 ரன்களில் வீழ்த்தி இந்த ஜோடியை பிரித்த ஷமி, கடைசி விக்கெட்டாக ஜேமிசனையும் 49 ரன்களில் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இந்திய அணி ஆடிவருகிறது. 

Also Read - சச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..? மெக்ராத்தின் நெற்றியடி பதில்

நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா அருமையான ஒரு கேட்ச்சை பிடித்தார். அதுவும் முக்கியமான கேட்ச். ஜேமிசனும் வாக்னரும் இணைந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அந்த ஜோடியை பிரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தபோது, ஷமியின் பந்தை லெக் திசையில் தூக்கியடித்தார் வாக்னர். அதை அபாரமாக டைவ் அடித்து அருமையாக பிடித்து, தான் ஒரு தலைசிறந்த ஃபீல்டர் என்பதை மறுபடியும் நீருபித்தார் ஜடேஜா.. அந்த காட்சி இதோ... 
 

This catch from India's Ravi Jadeja is indescribable. Have a feeling it'll make tonight's . (cc: ) pic.twitter.com/I62klS69jX

— Ben Baby (@Ben_Baby)
click me!