IND vs NZ டெஸ்ட்: படுமோசமான ஷாட்டுப்பா..! Ajinkya Rahane-வை கடுமையாக விமர்சித்த விவிஎஸ் லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Nov 25, 2021, 8:46 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அஜிங்க்யா ரஹானேவின் ஷாட் செலக்‌ஷனை கடுமையாக விமர்சித்துள்ளார் விவிஎஸ் லக்‌ஷ்மண்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் இன்று தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆடாததால், அவருக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே கேப்டன்சி செய்கிறார். 

முதலில்  பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் புஜாராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடிய கில் அரைசதம் அடித்தார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 52 ரன்களில் ஜாமிசனின் பந்தில் போல்டாகி வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு கில்லும் புஜாராவும் இணைந்து 61 ரன்கள் அடித்தனர்.

கில்லை தொடர்ந்து புஜாரா 26 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கேப்டன் ரஹானேவுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அண்மைக்காலமாக தொடர்ந்து சொதப்பிவரும் ரஹானே, ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவை என்ற கட்டாயத்தில் இந்த போட்டியில் ஆடிய நிலையில், அதை உணர்ந்து தெளிவாகவே ஆடினார். சிறப்பாக தொடங்கி நன்றாக ஆடிய ரஹானே, இந்த போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 35 ரன்னில் ஜாமிசன் பந்தில் ஆட்டமிழக்க, தவறான ஷாட் செலக்‌ஷனால் ஆட்டமிழன்ஹ்டார்.

ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை அடிக்கமுயன்று இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே தவறான ஷாட் செலக்‌ஷனால் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.  

145 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை ஷ்ரேயாஸ் ஐயரும் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து காப்பாற்றினர். அறிமுக போட்டியில் அபாரமாக ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் நாள் ஆட்ட முடிவில் 75 ரன்களுடன் களத்தில் உள்ளார். அரைசதம் அடித்த ஜடேஜாவும் 50 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்துள்ளது.
 
இந்த போட்டியில் அஜிங்க்யா ரஹானே தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் விவிஎஸ் லக்‌ஷ்மண். இதுகுறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், ரஹானே ஷாட் பிட்ச் பந்தை சரியாக ஆடமாட்டார் என்பது தெரிந்து ரஹானே களத்திற்கு வந்ததுமே ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசினார் ஜாமிசன். ரஹானே ஷார்ட் பிட்ச் பந்துகளை புல் ஷாட்டை தவிர வேறு எந்த ஷாட்டும் ஆடமாட்டார். தென்னாப்பிரிக்காவிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ, பந்தின் லைனுக்கு அருகில் சென்று ஆடலாம்; ஏனெனில் அங்கு நல்ல பவுன்ஸ் இருக்கும். ஆனால் பவுன்ஸே இல்லாத கான்பூரில் அந்த ஷாட்டை ஆடக்கூடாது. இதுமாதிரியான ஆடுகளங்களில் பேட்டின் ஃபுல் ஃபேஸில் வெர்டிகல் பேட்டில் ஆடவேண்டும் என்று லக்‌ஷ்மண் தெரிவித்தார்.
 

click me!