IND vs NZ டெஸ்ட்: வெறும் 5 விக்கெட்.. ஹர்பஜன் சிங்கை ஓரங்கட்டி அஷ்வின் படைக்கப்போகும் அபார சாதனை..!

Published : Nov 25, 2021, 07:03 PM IST
IND vs NZ டெஸ்ட்: வெறும் 5 விக்கெட்.. ஹர்பஜன் சிங்கை ஓரங்கட்டி அஷ்வின் படைக்கப்போகும் அபார சாதனை..!

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை படைப்பார்.  

சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணிக்காக 2011ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நம்பர் 1 ஸ்பின்னராக திகழ்கிறார்.

10 ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசிவரும் அஷ்வின், அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அஷ்வின், 79 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹர்பஜன் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் 417 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால், 418 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.

இந்த பட்டியலில் 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்திலும், 434 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 2ம் இடத்திலும் உள்ளனர். 417 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் 3வது இடத்தில் உள்ள நிலையில், அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தினால், ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்திற்கு முன்னேறிவிடுவார் அஷ்வின்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?