டாப் 3 டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் இவங்கதான்..! 1, 2, 3 என வரிசைப்படுத்திய விவிஎஸ் லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Aug 15, 2021, 4:17 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 3 ஆல்ரவுண்டர்கள் யார் யார் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் வரிசைப்படுத்தியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர்களுக்கு என்று எப்போதுமே தனி இடம் இருக்கிறது. 

கபில் தேவ், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான், கேரி சோபர்ஸ், ஜாக் காலிஸ், ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் என பல சிறந்த ஆல்ரவுண்டர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளனர். 

சமகால கிரிக்கெட்டிலும் பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, ஹோல்டர், பாட் கம்மின்ஸ், ஷகிப் அல் ஹசன், ஹர்திக் பாண்டியா என பல சிறந்த ஆல்ரவுண்டர்கள் உள்ளனர்.  இவர்களில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடந்த 2-3 ஆண்டுகளில் தங்களது பேட்டிங்கை பன்மடங்கு மேம்படுத்தி தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்குகின்றனர்.

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், ஜேசன் ஹோல்டர், ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூவரும் முறையே டாப் 3 இடங்களில் உள்ளனர்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 3 ஆல்ரவுண்டர்கள் யார் யார் என்று கருத்து கூறியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், என்னை பொறுத்தமட்டில் பென் ஸ்டோக்ஸ் தான் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டர். ஜேசன் ஹோல்டர் நம்பர் 2. ஜடேஜா நம்பர் 3. ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் ஆடிவரும் விதம், அவர் எந்தளவிற்கு பேட்டிங்கில் அவரது திறமையையும் நிதானத்தையும் மேம்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

ஜடேஜாவின் பேட்டிங் தான், அஷ்வினைவிட அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அணியில் எடுக்கப்பட காரணமாக அமைந்திருக்கிறது.
 

click me!