டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும்.? அக்தரின் அதிரடி ஆருடம்

Published : Aug 14, 2021, 10:24 PM IST
டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும்.? அக்தரின் அதிரடி ஆருடம்

சுருக்கம்

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.  

டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவான அணிகளாக திகழ்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சவாலளிக்கும். நியூசிலாந்து அணியும் வலுவான அணியே. அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகின்றன.

விராட் கோலி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தாலும், இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்லவில்லை என்பது விராட் கோலி மீதான விமர்சனமாக உள்ள நிலையில், அதை மாற்றி எழுதும் முனைப்பில் உள்ள விராட் கோலி, டி20 உலக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்று ஷோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும் தான் டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் மோதும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!