#ENGvsIND பெரிய வித்தைக்காரர் அவரு.. அவரை டீம்ல எடுக்காம தப்பு பண்ணிட்டீங்களே..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 14, 2021, 8:58 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரவிச்சந்திரன் அஷ்வினை ஆடவைக்காமல் இந்திய அணி தவறு இழைத்துவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வினை அணியில் எடுக்கவில்லை. அஷ்வினை அணியில் எடுக்காதது பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் பலரும், ரசிகர்களும் விமர்சித்தனர்.

முதல் போட்டியில் ஆடாத, அணியின் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் 2வது போட்டியிலாவது ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

எந்தவிதமான கண்டிஷனிலும் எப்பேர்ப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்பின்னரான அஷ்வினை, முதல் டெஸ்ட்டில் எடுக்காதது கடும் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கு உள்ளானது. அஷ்வினை எடுக்காதது இங்கிலாந்து அணிக்குத்தான் சாதகம் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

அஷ்வின் ஸ்பின் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர். எனவே 2வது டெஸ்ட்டிலாவது அவர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஷ்வின் 2வது டெஸ்ட் போட்டியிலும் எடுக்கப்படவில்லை.

அஷ்வினை எடுக்காதது பெரிய தவறு என்று டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, நான் பெரிய வித்தைக்காரரை பற்றி பேச விரும்புகிறேன். அஷ்வின் தான் அந்த வித்தைக்காரர். அவரை எப்படி அணியில் எடுக்காமல் விட்டார்கள்? ஆரம்பம் முதலே நான் இதைத்தான் கூறிவருகிறேன். முதல் டெஸ்ட்டிலேயே ஷர்துல் தாகூருக்கு பதிலாக அஷ்வின் தான் ஆடியிருக்க வேண்டும். அஷ்வினிடம் வேரியேஷன் இருக்கிறது. வித்தியாசமான ஆங்கிள்களில் பந்துவீசக்கூடியவர். கேரம் பந்து வீசுவார். மொயின் அலி, ஜடேஜா வீசும்போது பந்து திரும்பியதை பார்த்தோம். அஷ்வின் மட்டும் ஆடியிருந்தால் அசத்தியிருப்பார்.

இந்திய பவுலர்கள் ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் நன்றாக வீசுகிறார்கள். ஆனாலும் அஷ்வினை எடுக்காதது இந்திய அணி செய்த பெரிய தவறு என்று டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
 

click me!