ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மண்..! இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Aug 12, 2022, 10:31 PM IST
Highlights

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்படவுள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அதற்கு முன்பாக இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. ஜிம்பாப்வே தொடர் ஆகஸ்ட் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஆகஸ்ட் 23ம் தேதி அமீரகத்தில் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையின் டாப் 3 பேட்டிங் ஆர்டர்..! 2 இடத்திற்கு 4 வீரர்களுக்கு இடையே போட்டி

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கேஎல் ராகுல், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் மட்டுமே ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர். மற்றபடி, இரு தொடர்களிலும் வெவ்வேறு வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதனால் வீரர்களை பற்றி பிரச்னையில்லை. ஜிம்பாப்வே தொடரை முடித்துவிட்டு ராகுல், ஹூடா, ஆவேஷ் கான் ஆகிய மூவரும் அமீரகம் வந்துவிடுவர். ஆனால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆசிய கோப்பைக்கான அணியுடன் அமீரகம் செல்ல வேண்டும். 

அதனால் தான் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். விவிஎஸ் லக்‌ஷ்மண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - இந்திய அணியில் இடத்தை தக்கவைக்கும் நெருக்கடியில் ஜடேஜா..!

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
 

click me!