அவர் எந்த பேட்டிங் ஆர்டரிலும் ஆட வல்லவர்.. அவரை சுற்றித்தான் மொத்த இந்திய அணியும் ஆடணும்! கவாஸ்கர் கருத்து

By karthikeyan VFirst Published Aug 12, 2022, 9:08 PM IST
Highlights

எந்த பேட்டிங் ஆர்டரிலும் ஆடவல்ல சூர்யகுமார் யாதவை சுற்றித்தான் மற்ற அனைத்து இந்திய வீரர்களும் ஆடவேண்டும் என்று ரோஹன் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை அடுத்தடுத்து நடக்கவுள்ள நிலையில், அந்த 2 கோப்பைகளையும் வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.

கோப்பையை வெல்லும் உத்தியறிந்த ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில், அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக திகழும் வலுவான இந்திய அணி ஆசிய கோப்பையை மட்டுமல்லாது டி20 உலக கோப்பையையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம்..! இதுதான் பேட்டிங் ஆர்டர்

இந்திய அணியில் ராகுலும் கோலியும் இல்லாதபோது ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் ஓபனிங்கில் இறங்கினர். இருவருமே டாப் ஆர்டரில் நன்றாகத்தான் ஆடினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் தான் ஒரு கிளாஸ் பேட்ஸ்மேன் என்பதை டாப் ஆர்டரிலும் காட்டினார். 

இப்போது ராகுலும் கோலியும் அணிக்கு திரும்பிவிட்டதால் சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையில் தான் ஆடவேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவ் எந்த பேட்டிங் ஆர்டரிலும் ஆடக்கூடியவர் என்பது தெரிந்ததே.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் சுனில் கவாஸ்கரின் மகனுமான ரோஹன் கவாஸ்கர், சூர்யகுமார் யாதவை எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறக்கிடலாம். எந்த பேட்டிங் ஆர்டரிலும் ஆட வல்லவர் சூர்யகுமார். ஓபனிங், 3ம் வரிசை, 4ம் வரிசை என அனைத்து வரிசையிலும் சிறப்பாக ஆடக்கூடியவர்.

இதையும் படிங்க - இந்திய அணியில் இடத்தை தக்கவைக்கும் நெருக்கடியில் ஜடேஜா..!

எனவே அவரைச் சுற்றித்தான் மற்ற வீரர்கள் வேண்டும். எஞ்சியிருக்கும் ஓவர்களை பொறுத்து ரிஷப் பண்ட்டின் பேட்டிங் ஆர்டரும் மாற்றி இறக்கப்படலாம். டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையெல்லாம் கிடையாது. எஞ்சியிருக்கும் ஓவர்களை பொறுத்து எந்த வீரர் நன்றாக ஆடுவார் என்ற நோக்கில் இறக்கிவிடுவதுதான் சரியாக இருக்கும் என்று ரோஹன் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!