இந்தியாவையும் மற்ற அணிகளை போல எதிர்கொள்வோம்..! ஆசிய கோப்பைக்கு முன் அதிரடி காட்டும் பாபர் அசாம்

By karthikeyan VFirst Published Aug 12, 2022, 3:47 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.
 

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் மோதுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில், வரும் 28ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆசிய கோப்பையில் 3 முறையாவது இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையின் டாப் 3 பேட்டிங் ஆர்டர்..! 2 இடத்திற்கு 4 வீரர்களுக்கு இடையே போட்டி

உலக கோப்பைகளில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றியே அதுதான். அதற்கு முன் உலக கோப்பைகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதேயில்லை. அதற்கு காரணம், இந்தியாவிற்கு எதிரான போட்டி என்றாலே, பாகிஸ்தான் அணி அழுத்தத்திற்கு ஆளாகிவிடும். அதனாலேயே சில தவறுகளை செய்து, அதன்விளைவாக தோல்வியையும் தழுவிவிடும். இதுதான் காலங்காலமாக நடந்துவந்தது.

ஆனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அதை முறியடித்தது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியை பெரிய அழுத்தமாக எடுத்துக்கொள்ளாமல், தன்னம்பிக்கையுடன் களமிறங்கி இந்தியாவை வீழ்த்தியது.

அதே உத்தியை பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படுத்தவுள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியாவை 3 முறை பாகிஸ்தான் எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த போட்டிகளில் வெற்றி பெற்றுவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், மற்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளை எப்படி அணுகுவோமோ, அதேபோலவே இந்தியாவிற்கு எதிரான போட்டியையும் அணுகுவோம். 

இதையும் படிங்க - உன் கவலை எங்களுக்கு புரியுது.. அதுக்கு நாங்க என்ன பண்றது..? ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு கவாஸ்கர் பதிலடி

இந்தியாவிற்கு எதிரான போட்டி என்றாலே அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். அதை முறியடிக்க, கடந்த உலக கோப்பையில் முயற்சித்தோம். இந்தியாவை எதிர்கொள்கிறோம் என்பதை பற்றி யோசிக்காமல், எங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து ஆடினோம். இந்த முறையும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். சிறப்பாக விளையாட முயற்சிப்பது மட்டுமே எங்கள் கையில் உள்ளது. போட்டி முடிவுகள் எங்கள் கையில் இல்லை என்று பாபர் அசாம் தெரிவித்தார்.
 

click me!