கேஎல் ராகுல் கம்பேக்.. கேப்டன்சி தவானிடமிருந்து பறிக்கப்பட்டு ராகுலிடம் ஒப்படைப்பு

By karthikeyan VFirst Published Aug 11, 2022, 10:16 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இணைந்துள்ளார். கேஎல் ராகுல் அணியில் இணைந்ததால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்ட இந்திய அணி, அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோஹித் சர்மா, கோலி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்

இந்நிலையில், காயத்தால் அவதிப்பட்டு வந்த கேஎல் ராகுல், காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறிவிட்டதால், அவர் சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு பிசிசிஐ மருத்துவக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது. அதனால் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளார். அதனால் கேப்டன்சி தவானிடமிருந்து பறிக்கப்பட்டு கேஎல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கேஎல் ராகுல் ஐபிஎல்லுக்கு பின் காயமடைந்தார். அவரது கேப்டன்சியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடவிருந்தது. ஆனால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் ஆடவில்லை. அதன்பின்னர் இந்திய அணியில் ஆடாத ராகுல், ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிவந்தார். காயத்திலிருந்து முழுமையாக மீண்ட ராகுலுக்கு பிசிசிஐ மருத்துவக்குழு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டது.

அதனால் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார் ராகுல். ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து மிகப்பெரிய தொடர்கள் நடக்கவுள்ள நிலையில், ராகுல் முழு ஃபிட்னெஸுடன் இந்திய அணியில் இணைந்திருப்பது இந்திய அணிக்கு மிக நல்ல செய்தி.

இதையும் படிங்க - இந்த பையன் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர்.! 3 ஃபார்மட்டிலும் இவன் தான் நம்பர் 1.. ஜெயவர்தனே புகழாரம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
 

click me!