இந்திய அணிக்கு பேரதிர்ச்சி.. டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடுவது சந்தேகம்

By karthikeyan VFirst Published Aug 11, 2022, 8:33 PM IST
Highlights

காயத்தால் அவதிப்பட்டுவரும் இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
 

ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை நடக்கிறது. அடுத்தடுத்து முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஃபிட்னெஸ் கவலையளிக்கிறது.

ஜஸ்ப்ரித் பும்ரா வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்டவர். அதனால் அடிக்கடி அவரது முதுகுப்பகுதியில் காயம் ஏற்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது, முதுகில் காயம் ஏற்பட்டதால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெறவில்லை.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்

பவுலிங்கில் இந்திய அணியின் முக்கியமான துருப்புச்சீட்டான ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவுதான். ஹர்ஷல் படேலும் ஆசிய கோப்பையில் ஆடவில்லை. முகமது ஷமி அணியில் எடுக்கப்படவில்லை. எனவே சீனியர் ஃபாஸ்ட் பவுலரான புவனேஷ்வர் குமாருடன், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 2 அனுபவமற்ற பவுலர்களுடன் தான் இந்திய அணி ஆடுகிறது.

ஆசிய கோப்பையில் பும்ரா ஆடாததே இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். இந்நிலையில், டி20 உலக கோப்பையிலும் அவர் ஆடமாட்டார் என்று தெரிகிறது. டி20 உலக கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். எனவே பும்ரா ஆடினால் இந்திய அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் பும்ராவின் பங்களிப்பு அவசியம்.

இதையும் படிங்க - உன் கவலை எங்களுக்கு புரியுது.. அதுக்கு நாங்க என்ன பண்றது..? ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு கவாஸ்கர் பதிலடி

புதிய பந்து, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என ஆட்டத்தின் எந்த சூழலிலும் அருமையாக பந்துவீசி, அணிக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுக்கக்கூடிய மேட்ச் வின்னர் பும்ரா. அவர் டி20 உலக கோப்பையில் ஆடுவது சந்தேகம் என்று வெளியாகியுள்ள தகவல், இந்திய அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!