உலக கோப்பைகளில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த முடியாதது ஏன்..? பாக்., முன்னாள் வீரர் சொல்லும் உண்மை காரணம்

By karthikeyan VFirst Published Aug 11, 2022, 7:53 PM IST
Highlights

ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர்களில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக மண்ணை கவ்வ என்ன காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொஹைப் மக்சூத் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே வேற லெவல் தான். ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மீது அதிகமாக இருக்கும். இரு அணி வீரர்களுமே வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் ஆடுவார்கள். 

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாததால் சுமார் கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் ஆடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன. அதனால் ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்கின்றன.

1980களில் பாகிஸ்தான் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியிருக்கலாம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா தான் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி அதிகமான வெற்றிகளை குவித்துள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், உலக கோப்பைகளில் இந்தியா தான் முழுக்க முழுக்க பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்திவருகிறது.

இதையும் படிங்க - இந்த பையனிடம் அந்த திறமை இருக்கு.. இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரரை பரிந்துரைத்த ஜெயவர்தனே

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே கிடையாது. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ரெக்கார்டை இந்திய அணி பல்லாண்டுகளாக தொடர்ந்துவருகிறது. 1996,1999 உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தான் வென்றது. 2003ல் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தான் வென்றது. 2007 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா ஆடவில்லை. 

2011 உலக கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது. 2015 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் ஆடவில்லை. 2019 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா. 

டி20 உலக கோப்பைகளிலும் இந்தியா பாகிஸ்தானுடனா ரெக்கார்டை  தக்கவைத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால் இப்போதும், ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. ஆனால் இப்போது பாகிஸ்தான் டி20 உலக கோப்பையில் வெற்றி பெற தொடங்கியிருக்கும் நிலையில், முன்பு பாகிஸ்தான் தொடர் தோல்விகளை சந்தித்ததற்கும், இப்போது வெற்றி பெற தொடங்கியிருப்பதற்கான காரணம் குறித்து பாக்., முன்னாள் வீரர் சொஹப் மக்சூத் பேசியுள்ளார்.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொஹைப் மக்சூத், உலக கோப்பைகளில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர் தோல்விகளை சந்திக்கிறது. உலக கோப்பைகளில் இந்தியாவை எதிர்கொள்வது என்றாலே, பாகிஸ்தான் அணி அதிக உற்சாகமாகிவிடும். அதுதான் தோல்விகளுக்கு காரணம். ஆனால் அண்மைக்காஅலமாக பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டிகள் மீது ஸ்பெஷலாக கருதுவதில்லை. அதனால் தான் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் மேம்பட்டுள்ளது என்று சொஹைப் மக்சூத் தெரிவித்தார்.
 

click me!