உலக கோப்பையில் எப்போதுமே பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்த இதுதான் காரணம்..! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 19, 2021, 7:02 PM IST
Highlights

உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவிகித வெற்றி விகிதத்தை இந்திய அணி பெற்றிருப்பதற்கான காரணம் என்னவென்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே மிகக்கடும் போட்டியகா அமையும். இரு அணி வீரர்களுமே வெற்றி வேட்கையுடன் போராடுவார்கள். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு தொடர்கள் நடப்பதில்லை என்பதால், இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. அதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை மோதிய 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கிறது. 

ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

ஆனாலும் ஐசிசி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது என்றால், இந்தியாவை வீழ்த்திவிடுவோம் என்றும் இந்திய அணியெல்லாம் தங்கள் அணிக்கு ஒரு டீமே கிடையாது என்பது போலவும் பாகிஸ்தான் இந்நாள், முன்னாள் வீரர்கள் பேசுவார்கள். ஆனால் கடைசியில் தோற்றுவிடுவார்கள். இந்திய வீரர்கள் அந்த மாதிரியெல்லாம் பந்தாவாக பேசாததுதான் இந்தியாவின் வெற்றிக்கு காரணம் என்று வீரெந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், 2011 மற்றும் 2003 உலக கோப்பைகளை பற்றி பேசினால், பாகிஸ்தானை விட இந்திய அணி அந்த உலக கோப்பைகளில் நல்ல நிலையில் இருந்தது. பெரிய பெரிய ஸ்டேட்மெண்ட்டுகள் கொடுப்பதை விட நமது ஆட்டிடியூட் தான் முக்கியம். பாகிஸ்தான் அணி சார்பில் பெரிய பெரிய ஸ்டேட்மெண்ட்கள் கொடுப்பார்கள் என்று சேவாக் தெரிவித்தார்.

அதாவது பாகிஸ்தான் வெறும் வாய் உதார் தான்; செயலில் ஒன்றுமில்லை என்பதைத்தான் நாசூக்காக தெரிவித்துள்ளார் சேவாக். 
 

click me!