டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்..! உறுதிசெய்தார் கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Oct 19, 2021, 4:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார்கள் என்பதை கேப்டன் விராட் கோலி உறுதி செய்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. வரும் 23ம் தேதி சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 24ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் யார் இறங்குவார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. ஏனெனில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, உலக கோப்பையில் தானே தொடக்க வீரராக இறங்கப்போவதாக கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.

ஆனால் ஐபிஎல்லில் கேஎல் ராகுல் அபாரமாக பேட்டிங் ஆடி 626 ரன்களை குவித்து அசத்தினார். ஐபிஎல் 14வது சீசனி கேஎல் ராகுலின் சராசரி 62.6 மற்றும் ஸ்டிரைக் ரேட் 138.80 ஆகும். ஐபிஎல்லில் அபாரமாக ஆடி தன்னை ஓபனிங்கில் இருந்து புறக்கணிக்கமுடியாதபடி செய்தார் ராகுல்.

இதையும் படிங்க - ராகுல் டிராவிட் இடத்தில் நீங்கதான் இருக்கணும்..! பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த விவிஎஸ் லக்‌ஷ்மண்

இதற்கிடையே, ஐபிஎல் 14வது சீசனின் கடைசிக்கட்டத்தில் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி வேற லெவலில் பேட்டிங் ஆடிய இஷான் கிஷனிடம், உன்னை(இஷான்) ஓபனராகத்தான் டி20 உலக கோப்பையில் எடுத்திருக்கிறோம்; எனவே தயாராக இரு என்று கோலி இஷானிடம் கூறியது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஜோடி குறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, ஐபிஎல்லுக்கு முந்தைய சூழல் வேறு. ஆனால் ஐபிஎல்லில் ராகுல் ஆடிய விதத்தை பார்க்கையில், அவரைத்தாண்டி ஒருவரை ஓபனிங்கிற்கு பரிசீலிக்க முடியாது. ரோஹித் உலகத்தரம் வாய்ந்த வீரர். எனவே ரோஹித்தும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். நான் 3ம் வரிசையில் ஆடுவேன் என்று கோலி கூறினார்.
 

click me!