ரஹானேவின் பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா இறங்கியதற்கு இதுதான் காரணம்! சச்சின் ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்து விளக்கிய சேவாக்

Published : Sep 03, 2021, 06:27 PM ISTUpdated : Sep 05, 2021, 10:26 PM IST
ரஹானேவின் பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா இறங்கியதற்கு இதுதான் காரணம்! சச்சின் ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்து விளக்கிய சேவாக்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரஹானேவின் பேட்டிங் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜாவை இறக்கியதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித்(11), ராகுல்(17), புஜாரா(4), ஜடேஜா(10), ரஹானே(14) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஷர்துல் தாகூரின் அதிரடி அரைசதத்தால்(36 பந்தில் 57 ரன்கள்) இந்திய அணி 191 ரன்களை எட்டியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கே சுருண்டது. இந்த போட்டியில் ரஹானேவின் 5ம் பேட்டிங் வரிசையில் ஜடேஜா இறக்கிவிடப்பட்டார்.

இந்த தொடர் முழுவதுமாகவே இந்திய அணியின் துணை கேப்டனும் சீனியர் வீரருமான அஜிங்க்யா ரஹானே ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார். லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் மட்டும் ஒரு அரைசதம்(61) அடித்தார். அதைத்தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலுமே சொதப்பினார். இந்த தொடரில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் சேர்த்தே மொத்தமாக வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி 18.17 ஆகும்.

ரஹானே தொடர்ந்து திணறிவருவதால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை ஆடவைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஆனால் ரஹானே அணியில் எடுக்கப்பட்டாலும், 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அவர், அவரது வழக்கமான 5ம் வரிசை பேட்டிங் ஆர்டரில் ஆடவில்லை. அந்தவரிசையில் ஜடேஜா இறக்கப்பட்டு, ரஹானே 6ம் வரிசையில் பேட்டிங் ஆடினார். ஆனால் ஜடேஜாவும் சோபிக்கவில்லை; ரஹானேவும் சோபிக்கவில்லை. அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், 2004 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் 4ம் வரிசையில் சரியாக ஆடவில்லை. உடனே சச்சினை 5ம் வரிசையில் இறக்கிவிட்டு, கங்குலி அவரே 4ம் வரிசையில் சென்று ஆடினார். ஒரு பேட்டிங் பொசிசனில் ஒரு வீரர் தொடர்ச்சியாக சரியாக ஆடவில்லை என்றால், அவரது பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும்.

ஓபனிங்கில்  நான் கூட சரியாக ஆடாத சமயத்தில் மிடில் ஆர்டரில் இறக்கப்பட்டிருக்கிறேன். நான் நல்ல ரிதத்திற்கு வந்தபிறகு, மீண்டும் டாப் ஆர்டரில் இறக்கப்பட்டிருக்கிறேன். எனவே ரஹானேவின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டதற்கு அது ஒன்றுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!