
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 37ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் தான் நேற்று பெங்களூருவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 401 ரன்கள் குவித்தது. அதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஜமான் நல்ல தொடக்கம் கொடுத்தார். ஜமான் 81 பந்துகளில் 8 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உள்பட 126 ரன்கள் குவித்தார்.
இந்த வாழ்க்கையிலும் அதற்கு அப்பாலும் முடிவில்லாமல் நான் உன்னை நேசிக்கிறேன் – அனுஷ்கா சர்மா!
போட்டியின் போது மழை பெய்த நிலையில், போட்டியானது 41 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் போட்டி நடந்தது. ஆனால், அப்போதும் மழை குறுக்கிடவே டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில்,தான் விராட் கோலி முடி வெட்டிக் கொண்டே மொபைல் போனில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.