IND vs SA: முதல் இடத்திற்கான ரேஸில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா; 35ஆவது பிறந்தநாளில் விராட் கோலி சாதிப்பாரா?

By Rsiva kumar  |  First Published Nov 5, 2023, 1:53 PM IST

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 37ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 37ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், இன்று விராட் கோலி தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆதலால் இன்றைய போட்டி விராட் கோலிக்கு சிறப்பு வாய்ந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாதி பெயரை நீக்க வேண்டும்..! பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த கார்த்தி சிதம்பரம்

Tap to resize

Latest Videos

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், தென் ஆப்பிரிக்கா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கெரால்டு கோட்ஸிக்குப் பதிலாக தப்ரைஸி ஷம்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. மேலும், 2ஆவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

தென் ஆப்பிரிக்கா:

குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டூசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, கஜிசோ ரபாடா, லுங்கி நிகிடி

இந்த வாழ்க்கையிலும் அதற்கு அப்பாலும் முடிவில்லாமல் நான் உன்னை நேசிக்கிறேன் – அனுஷ்கா சர்மா!

ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் இரு அணிகளும் 5 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில், தென் ஆப்பிரிக்கா 3 போட்டியிலும், இந்தியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதே போன்று இரு அணிகளும் விளையாடிய 90 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 50 போட்டிகளிலும், இந்தியா 37 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விராட் கோலி: வயதோ 35, ஒருநாள் போட்டி சதமோ 48, அரைசதமோ 136!

click me!