விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இதுவரையில் விளையாடிய சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 136 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பவர் 5ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். அதன் பிறகு 20 ஆண்டுகளில் 2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று தற்போது வரையில் விளையாடி வருகிறார்.
இதுவரையில் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களும், 29 அரைசதங்களும் உள்பட 8676 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று 286 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13,525 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 48 சதமும், 70 அரைசதங்களும் அடித்துள்ளார். தொடர்ந்து 115 டி20 போட்டிகளில் விளையாடி 4008 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒரு சதமும், 37 அரைசதங்களும் அடித்துள்ளார்.
ஹேப்பி பர்த்டே விராட் கோலி – இக்கட்டான சூழலில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட வெற்றி நாயகன்!
விராட் கோலியின் சாதனை பட்டியல்:
அதிக ரன்கள்: 26,209
அதிக இரட்டை சதங்கள்: 7
அதிக சதங்கள்: 78
அதிக அரை சதங்கள்: 136
அதிக ODI ரன்கள்: 13,525
அதிக ODI சதங்கள்: 48
அதிக டி20 ரன்கள்: 4008
அதிக ஆசிய கோப்பை ரன்கள்: 1,171
அதிக ஐசிசி ரன்கள்: 3,142
அதிக ஐசிசி நாக் அவுட் ரன்கள்: 656
அதிக ஐசிசி இறுதிப்போட்டி ரன்கள்: 280
அதிக ஐசிசி விருதுகள்: 9
ஒருநாள் போட்டிகளில் 8,000 முதல் 13,000 ரன்களை மிக வேகமாக எட்டியவர்.
ஐசிசியின் தசாப்தத்தின் ஆண் கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
வங்கதேசத்தில் ஒருவரைத் தவிர, கோஹ்லி தான் விளையாடிய ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் அதற்கு எதிராகவும் டெஸ்ட் சதம் அடித்தார்.