அனுஷ்கா சர்மா தனது காதல் கணவர் விராட் கோலிக்கு 35ஆவது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா பிறந்தாள். இந்த நிலையில், டெல்லியில் பிறந்து வளர்ந்த இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விராட் கோலி: வயதோ 35, ஒருநாள் போட்டி சதமோ 48, அரைசதமோ 136!
இந்த நிலையில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது காதல் கணவர் விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அவர் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு பாத்திரத்திலும் விதிவிலக்கானவர். ஆனால் எப்படியோ தனது புகழ்பெற்ற தொப்பியில் இன்னும் இறகுகளைச் சேர்த்துக் கொண்டே போகிறேன், இந்த வாழ்க்கையிலும் அதற்கு அப்பாலும் முடிவில்லாமல் நான் உன்னை நேசிக்கிறேன், ஒவ்வொரு வடிவத்திலும், எல்லாவற்றிலும், அது எதுவாக இருந்தாலும் விராட் கோலி என்று காதல் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
ஹேப்பி பர்த்டே விராட் கோலி – இக்கட்டான சூழலில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட வெற்றி நாயகன்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 37ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அனுஷ்கா சர்மா நேரில் வந்து விராட் கோலிக்கும் இந்திய அணிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், இன்றைய போட்டியிலும் அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு வருவார் என்று தெரிகிறது.