இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் 2ஆவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் முதல் முறையாக இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ளது. லக்னோவில் இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன் படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா – கைவிட்ட கிங் கோலி; 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்த இந்தியா!
லக்னோ மைதானம் பந்து வீச்சிற்கு சாதமாக இருந்ததால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். அதன்படி அடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்த சச்சின் சாதனை சமன் செய்வதை கடந்த போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் கோட்டைவிட்டார்.
IND vs ENG: முன்னாள் சுழல் ஜாம்பவான் மறைவு: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்!
இந்தப் போட்டியில் சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 9 பந்துகளை சந்தித்த விராட் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக விராட் கோலி டக் அவுட்டானார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் டாப் 7 இடத்தில் விளையாடும் இந்திய வீரர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
Bishan Singh Bedi: இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!
இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 34 முறை டக் அவுட்டாகியுள்ளார். இந்தப் போட்டியின் மூலமாக விராட் கோலி சமன் செய்துள்ளார். விரேந்திர சேவாக் 31 முறை டக் அவுட்டாகி 3ஆவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 30 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதே போன்று சவுரவ் கங்குலி 29 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிராக அதிக முறை டக் அவுட்டாகி விராட் கோலி மோசமான சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் மூலமாக 11ஆவது முறையாக டக் அவுட்டாகியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 முறையும், இலங்கைக்கு எதிராக 4 முறையும், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தலா 2 முறையும் டக் அவுட்டாகியுள்ளார்.
India vs England: சர்வதேச கிரிக்கெட்டில் 18000 ரன்களை கடந்த ரோகித் சர்மா!