இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 29ஆவது லீக் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்தது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 9 ரன்னிலும், அடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இவரைத்தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார்.
IND vs ENG: முன்னாள் சுழல் ஜாம்பவான் மறைவு: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்!
அப்போது இந்திய அணி 11.3 ஓவர்களில் 40 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன் பிறகு வந்த கேஎல் ராகுல் ஓரளவு சர்மாவுடன் இணைந்து கை கொடுத்தார். அவர், 58 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா 101 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Bishan Singh Bedi: இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 8 ரன்களில் ஆட்டமிழக்க, முகமது ஷமி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியாக நிதானமாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஜஸ்ப்ரித் பும்ரா 16 ரன்களில் ரன் அவுட்டாக, குல்தீப் யாதவ் 9 ரன் எடுக்கவே இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்துள்ளது. இதுவரையில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் 2ஆவது பேட்டிங் செய்துள்ளது.
India vs England: சர்வதேச கிரிக்கெட்டில் 18000 ரன்களை கடந்த ரோகித் சர்மா!
இந்தப் போட்டியில் தான் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. இதில் 229 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், அடில் ரஷீத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். மார்க் வுட் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.