செம ரைமிங்கான ஸ்டேட்மெண்ட்டில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி

By karthikeyan VFirst Published Feb 24, 2020, 2:35 PM IST
Highlights

தனது ஃபார்ம் குறித்து விமர்சிப்பவர்களுக்கும் பேசுபவர்களுக்கும் செம ரைமிங்காக பதிலடி கொடுத்துள்ளார் விராட் கோலி.
 

இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும், இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணம் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக அமையவில்லை. ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 

டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு போட்டி தொடர்களிலும், பெரியளவில் சோபிக்காத கோலி, டெஸ்ட் போட்டியிலும் படுமோசமான ரன்னுக்கு அவுட்டாகி சென்றார். கோலி இதுமாதிரி அவுட்டாவதெல்லாம் அரிதினும் அரிது. முதல் இன்னிங்ஸில் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்த கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 19 ரன்களில் அவுட்டானார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். 

டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல; ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் கோலி சரியாக ஆடவில்லை. 5 டி20 போட்டிகளில் நான்கில் கோலி ஆடினார். 4வது போட்டியில் மட்டும் ஆடவில்லை. எனவே அந்த நான்கு போட்டிகளில் 45, 11, 38, 11 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 ஒருநாள் போட்டிகளில் முறையே 51, 15 மற்றும் 9 ரன்கள் அடித்தார். முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 21 ரன்கள் அடித்தார்.

கோலி சரியாக ஆடாதது தான் இந்திய அணியின் போட்டி முடிவில் எதிரொலிக்கிறது. கோலி நன்றாக ஆடினால் முடிவுகள் மோசமாக இருக்காது. கோலி ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடாததால் அணியும் தோல்வியை தழுவியது. 

எனவே கோலியின் ஃபார்ம் தான் பேசுபொருளாக உள்ளது. ஆனால் தான் நல்ல ஃபார்மில் தான் இருப்பதாகவும் தனது பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் கோலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள விராட் கோலி, நான் நன்றாகத்தான் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறேன். எனது பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லை. சில நேரங்களில் ஸ்கோர் செய்யாததை வைத்து பேட்டிங்கை மதிப்பிட முடியாது.  இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும்போது இடையில் 3-4 இன்னிங்ஸ்களில் சரியாக ஸ்கோர் செய்ய முடியாமல் போவது இயல்புதான். ஒரு இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லையென்றாலே வெளியில் ஏதாவது பேசத்தான் செய்வார்கள். ஆனால் நானும் அதே பார்வையில் எனது பேட்டிங்கை பார்க்கமுடியாது. 

Also Read - அவரு வேலைக்கு ஆகமாட்டாரு.. அவர தூக்கிட்டு இவர சேருங்க.. ஜாம்பவனையே தூக்கிப்போட வலியுறுத்தும் முன்னாள் வீரர்

வெளியில் இருப்பவர்களை போலவே நானும் நினைத்தால், இந்நேரம் நானும் அணியை விட்டு வெளியே தான் இருந்திருப்பேன். அதனால் வெளியில் பேசும் கருத்துகள் என்னை பாதிக்கவில்லை. எனது பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லை. அடிப்படையான விஷயங்களை கரெக்ட்டா பின்பற்றி கடினமாக பயிற்சி செய்யவேண்டும். எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக ஆட வேண்டும் என்று நினைக்க முடியாது. சில நேரங்களில் இதுமாதிரி நடக்கும். ஆனால் அப்போது, நம்மை நாமே அழுத்தத்திற்கு ஆளாக்கிக்கொள்ளக்கூடாது. அடுத்த டெஸ்ட் போட்டியில் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம். நான் என்ன ஸ்கோர் செய்கிறேன் என்பது முக்கியமல்ல. நான் 40 ரன்கள் அடித்து அணி ஜெயித்தால் அதுதான் மகிழ்ச்சி. நான் 100 அடித்தும் அணி தோற்றால், அந்த சதத்தால் பிரயோஜனமில்லை என்று கோலி தெரிவித்தார். 
 

click me!